பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தின் தந்தை A.Q. கான் இன்று காலமானார். பாகிஸ்தானின் ‘அணுசக்தித் திட்டத்தின் தந்தை’ என்று அழைக்கப்படும் அப்துல் காதீர் கான் என்ற A.Q.கான் இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.அவருக்கு வயது 85.இஸ்லாமாபாத்தில் உள்ள கான் ஆராய்ச்சி ஆய்வகங்கள் (KRL) மருத்துவமனையில் காலை 7.00 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) கான் காலமானார். அவர் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அதிகாலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.இதனையடுத்து,அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். […]