சென்னை:அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் ஒருவரையொருவர் குறை சொல்லிக்கொண்டு இருப்பதால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் ஏ.ஜி.மௌரியா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் வழக்கத்துக்கு மாறாக கனமழை பெய்து வருவதால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.குறிப்பாக,தி.நகர் பகுதியில் மழை நீர் அதிக அளவில் தேங்கியுள்ளது.இதனால்,மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இந்நிலையில்,ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்காக தி.நகரில் மட்டும் ரூ.200 கோடி செலவிடப்பட்டிருப்பதாகக் கணக்கு உள்ளதாகவும்,ஆனால், மழை பெய்தால் […]