வெந்தயக்கீரை, வெந்தயம் இரண்டுமே மருத்துவப் பலன்கள் கொண்டவை. குறிப்பாக வெயில் காலத்தில் வெந்தயகீரையை சமைத்து சாப்பிட்டால், உடலுக்கு நல்ல குளிர்ச்சி கிடைக்கும். வெந்தயக்கீரையின் மருத்துவ நன்மைகள் வெந்தயக்கீரையை வேகவைத்து தேன் விட்டுக் கலந்து, அளவாகச் சாப்பிட்டுவந்தால், மலம் எளிதாக வெளியேறும். நெஞ்சு வலி, இருமல், மூலம் மற்றும் செரிமானப் பாதையில் இருக்கும் புண்கள் குணமாகும். இதன் இலையை எடுத்துச் சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சையைச் சேர்த்துக் குடிநீர் செய்து தேன் கலந்து சாப்பிட்டுவந்தால், நெஞ்சு வலி, மூச்சடைப்பு […]