சுந்தர்.சி இயக்குவதாக இருந்த “சங்கமித்ரா” படம் படப்பிடிப்பு துவங்காமல் தொடர்ந்து கிடப்பில் உள்ளது. அதனால் படம் கைவிடப்பட்டுவிட்டது என செய்தி பரவி வந்தது. இது பற்றி இயக்குனர் சுந்தர்.சி நேற்று விளக்கம் அளித்துள்ளார். ‘சங்கமித்ரா’வின் படப்பிடிப்பை வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் துவங்கவுள்ளேன்” என அவர் கூறியுள்ளார். மேலும், சங்கமித்ராவாக தோனி பட புகழ் நடிகை திஷா பதானி நடிக்கவுள்ளார். ஜெயம் ரவி மற்றும் ஆர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.