டெல்லியில், தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட சிலிண்டர் வெடி விபத்தில் 7 பேர் பலியாகினர். மேற்கு டெல்லியின், மோதி நகரில் சீலிங் பேன் தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு ஆலையில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் திடிரென வெடித்து சிதறின. இதனால், தொழிற்சாலையின் சில பகுதிகள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி, 7 பேர் பலியாகினர். தீயனைப்புத்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விபத்து பகுதிக்கு விரைந்து சென்று, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த 15 பேர் பத்திரமாக […]