இந்தியாவில் கொரோனாவிற்கான 3 தடுப்பூசி சோதனை நிலையில் உள்ளதாக பிரதமர் மோடி இன்றைய உரையில் கூறியுள்ளார். இந்தியாவில் 74வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி அவர்கள் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார். அதனையடுத்து நாட்டு மக்களிடம் உரையாற்றிய மோடி கொரோனாவிற்கான தடுப்பூசி நடைமுறைக்கு வருவதை குறித்து கூறினார். கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி மருந்தான கோவாக்ஸினை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்து வருகின்றனர். இந்தியாவில் மூன்று தடுப்பூசிகள் சோதனை நிலையில் உள்ளதாகவும், விஞ்ஞானிகள் பச்சை கொடி காண்பித்து […]
இந்திய பிரதமருக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்த ஆஸ்திரேலிய பிரதமர். இந்தியா முழுவதும் இன்று 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில், பல கட்டுப்பாடுகளுடன் சுதந்திர தினவிழா நிகழ்வுகள் நடைபெற்றது. இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் 74-வது சுதந்திர தினவிழா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு அவர்களின் சுதந்திர தின விழா வாழ்த்துக்கள் என்றும் அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். […]
சவால்கள் வரும்போது எப்படி செயல்படுகிறோம் என்பதை லடாக் சம்பவம் உலகிற்கு எடுத்துக்காட்டியதாக சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் 74 -வது சுதந்திர தினம், இன்று கொண்டாடப்படும் நிலையில், டெல்லி, செங்கோட்டையில் இன்று தேசிய கோடியை ஏற்றி, மரியாதை செலுத்தினார். அதன்பின் நாட்டு மக்களிடையே அவர் உரையாற்றினார். அந்த உரையில் அவர், பயங்கரவாதம் போன்ற சவால்களை சமாளிக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது எனவும், இந்த பேரழிவுகள் அனைத்தையும் கையாளும் திறமையும் இந்தியா கொண்டுள்ளதாகவும் அவர் […]
தமிழக அரசின் ஏ. பி. ஜே. அப்துல்கலாம் விருது ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை நிறுவனருக்கும், மாநில இளைஞர் விருதுகள் 3 பேருக்கும் முதல்வர் வழங்கினார். நாடு முழுவதும் கொண்டாடப்படும் 74வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னையில் உள்ள தலைமை செயலகமான கோட்டையில் உள்ள கொத்தளத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடி ஏற்றினார். அதனையடுத்து இந்த விழாவில் கொரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட பல்வேறு துறைகளில் உள்ள முன்கள பணியாளர்களுக்கு சிறப்பு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை […]
74-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி கொடியேற்றிய பின்னர் சிறப்பு விருதுகளை வழங்கினார். உள்ளாட்சி அமைப்புகளில் சிறந்த மாநகராட்சி விருது வேலூர் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது. சிறந்த நகராட்சிகள் முதல் பரிசு விழுப்புரம், இரண்டாம் பரிசு கரூர், மூன்றாம் பரிசு கூத்த நல்லூருக்கு விருது தரப்பட்டது. சிறந்த பேரூராட்சி முதல் பரிசு சேலம் வனவாசி, இரண்டாம் பரிசு தேனி வீரபாண்டி, மூன்றாம் பரிசு கோவை மதுக்கரைக்கு முதல்வர் பழனிசாமி விருதுகளை […]
உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதனுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது. நாடு முழுவதும் இன்று 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், பல கட்டுப்பாடுகளுடன், சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றினார். இந்நிலையில், இந்த விழாவில் பலருக்கு விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், கொரோனா ஒழிப்பு பணியில் அரசுக்கு வழங்கிய ஆலோசனைகளை அங்கீகரிக்கும் வகையில், உலக சுகாதார நிறுவனத்தின் […]
சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும். நாடு முழுவதும் இன்று 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், பல கட்டுப்பாடுகளுடன், சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் ரூ .8,000 முதல் ரூ .8,5000 வரை உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னை அறிவாலயத்தில் தேசிய கொடியை ஏற்றினார் மு.க.ஸ்டாலின். நாடு முழுவதும் இன்று 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், பல கட்டுப்பாடுகளுடன், சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் முதல்முறையாக தேசிய கொடியை ஏற்றியுள்ளார்.
இந்தியா தன்னிறைவு பெறுவதே, ஒவ்வொரு இந்தியரின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். நாடு முழுவதும் இன்று 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், பல கட்டுப்பாடுகளுடன், சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில், 7-வது முறையாக தேசிய கொடியை ஏற்றி மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், இந்தியா விரைவில் தன்னிறைவு பெரும் என்றும், இந்தியா தன்னிறைவு பெற்றால் தான் பிற நாடுகளுக்கு உதவி செய்ய […]
சுதந்திரப்போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுகூறும் நாளே சுதந்திர தினம். நாடு முழுவதும் இன்று 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், பல கட்டுப்பாடுகளுடன், சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில், 7-வது முறையாக தேசிய கொடியை ஏற்றி மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், சுதந்திரப்போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுகூறும் நாளே சுதந்திர தினம் என்று கூறியுள்ளார். மேலும், கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்களப் பணியாளர்களுக்கு […]
1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா, ஆங்கிலேய அரசின் அதிகாரத்திடம் இருந்து சுதந்திரம் பெற்றது. உலகின் மிகப்பெரிய சுதந்திர ஜனநாயக நாடாக உருவெடுத்து இன்றுடன் 73ஆண்டுகள் நிறைவடைந்து 74வது சுதந்திர ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது சுதந்திர இந்தியா. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தனது 74 ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. அடிமைப்பட்டு கிடந்த இந்திய மக்களுக்கு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் கிடைத்த நாள் இன்று. இந்த சுதந்திரத்திற்காக பல லட்சக்கணக்கானோர் தங்கள் உயிரை […]
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட விமான நிலையம். இந்தியா முழுவதும் நாளை 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், சில வழிமுறைகளின் அடிப்படையில் நடைபெறுகிறது. இந்நிலையில், சுதந்திர தினவிழாவை கொண்டாடும் வகையில், சென்னை விமான நிலையம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.