7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு திராவிட மாடல் அரசின் சமூக நீதி பயணத்தின் ஹாட்ரிக் வெற்றி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முந்தைய அதிமுக ஆட்சியின் போது, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்தும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டை வழங்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை தலைமை […]