சென்னை:நடப்பு ஆண்டில் தமிழகத்தில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடைபெறவுள்ளன என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு. தமிழகத்தில் நடப்பு ஆண்டில் ஏழு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மற்றும் சங்ககாலக் கொற்கைத் துறைமுகத்தினை அடையாளம் காண முன்களப் புல ஆய்வு நடைபெறும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக,முதல்வர் கூறியதாவது: “தமிழ் நிலமானது மிகத்தொன்மை வாய்ந்தது.தமிழின் தொன்மையையும், தமிழரின் பண்பாட்டையும் அறிவியல்பூர்வமாக நிறுவ வேண்டுமானால் முறையான அகழாய்வுகள் அவசியமாகும்.அண்மைக்காலமாக,கீழடி, அழகன்குளம்,கொற்கை,சிவகளை,ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய […]