மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள முகாம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலச்சரிவானது அதிகாலை 3 மணி அளவில் முகாமில் இருந்தவர்கள் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்டுள்ளது.90க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியிருந்தனர் என்றும் அதில் 60 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர், 25பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.