ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,300 பேரை காணவில்லை. மேற்கு ஜெர்மனியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. ஜெர்மனி மற்றும் இதன் அருகில் உள்ள பெல்ஜியம், நெதர்லாந்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் பல குடியிருப்பு வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. மேலும் பல வீடுகள், கட்டிடங்கள், வாகனங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 60 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். […]