தமிழகத்தில் வெயிலின் தாக்கம் ஆனது கடுமையாக இருந்து வருகிறது.இந்நிலையில் கடந்த சில நாட்கள் வெயில் மக்களை சுட்டு எரித்து வருகிறது.இதனால் மக்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். ஒரு பக்கம் கடுமையான வெயில் என்றால் மறுபக்கம் கொல்லும் கொரோனா என்று அசாதாரண சூழ்நிலையை மக்கள் சந்தித்து வரும் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வானிலை குறித்து ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது; அதில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதாவது, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், கன்னியாகுமரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் திருப்பத்தூர், கரூர், சேலம், […]