இந்தியாவில் 5G சேவைகள் தொடங்கப்பட்ட 50 நகரங்களின் பட்டியலை பகிர்ந்த மத்திய அரசாங்கம். அதன்படி, இந்தியாவில் 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இன்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள 50 நகரங்களில் 33 நகரங்கள் குஜராத்தில் உள்ளன. இந்த பட்டியலில் மகாராஷ்டிராவில் இருந்து 3 நகரங்களும், மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து தலா 2 நகரங்களும் அடங்கும். மேலும், டெல்லி, தமிழ்நாட்டில் சென்னை, கர்நாடகா, […]
டெல்லியில் 6வது இந்திய மொபைல் காங்கிரஸ் விழாவில் பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 6-வது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி தொலை தொடர்பு சேவையை தொடங்கி வைத்தார். இந்தியாவில் 5G தொழில்நுட்பத்தின் திறனைக் காட்ட, நாட்டின் மூன்று முக்கிய தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் தலா ஒரு பயன்பாட்டை பிரதமரின் முன் செய்து காட்டினர். முதற்கட்டமாக சென்னை, அஹமதாபாத், பெங்களூரு, சண்டிகர், டெல்லி, காந்திநகர், குருகிராம், […]
இந்தியாவில் 5ஜி சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. இந்தியாவில் அதிவேக அலைக்கற்றையான 5ஜி சேவையை வரும் அக்டோபர் 1ம் தேதி இன்று டெல்லியில் நடைபெறும் ‘இந்தியா மொபைல் காங்கிரஸ் மாநாட்டில்’ தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. கடந்த ஜூலை 26-ஆம் தேதி 5ஜி அலைவரிசைக்கான ஏலம் தொடங்கியது. ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் – ஐடியா, அதானி குழுமம் ஆகிய 4 நிறுவனங்கள் ஏலத்தில் பங்குபெற்றன. இதில் முதல் நாள் ஏலத்தில் இதுவரை […]
பிரதமர் மோடி இந்தியாவில் 5ஜி சேவையை அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் அதிவேக அலைக்கற்றையான 5ஜி சேவையை வரும் அக்டோபர் 1ம் தேதி டெல்லியில் நடைபெறும் ‘இந்தியா மொபைல் காங்கிரஸ் மாநாட்டில்’ தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய பிராட்பேண்ட் மிஷன் ட்வீட்டில், “இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் இணைப்பை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் 5ஜி சேவைகளை […]
5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அரசு பெற்ற மொத்த மதிப்பான ரூ.1,50,173 கோடியில் 58.65% ஏலம் எடுத்தது ரிலையன்ஸ் ஜியோ. இந்தியா தனது முதல் 5ஜி அலைக்கற்றை ஏலத்தை கடந்த 7 நாட்களாக நடத்தி முடித்திருந்தது. மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 5ஜி ஏலம் நேற்று நிறைவு பெற்றது. இதில், ரூ.1,50,173 கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த ஏலத்தின் இறுதியில் 4 நிறுவனங்கள் ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளதாகவும், ரிலையன்ஸ் […]
இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை அறிமுகப்படுதப்படவுள்ளது எனவும், இதற்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 5ஜி சாதனங்களை சோதனை செய்வதற்கான கட்டமைப்பு செயல்பாட்டுக்கு வருகிறது எனவும்,மேலும்,வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 6ஜி தொழில்நுட்பத்துக்கு மாற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்திருந்தார். பிரதமரை தொடர்ந்து,இந்தியாவில் ஸ்பெக்ட்ரம் ஏலம் விரைவில் நடத்தப்படும் என்றும் இந்தாண்டு இறுதியில் 5ஜி தொலைத்தொடர்பு சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிரிபார்க்கப்படுவதாகவும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய தொலைத் தொடர்புத்துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான் அண்மையில் அறிவித்திருந்தார். இந்நிலையில்,பொது […]
இந்தியாவில் இந்தாண்டு இறுதியில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அறிவிப்பு. இந்தியாவில் ஸ்பெக்ட்ரம் ஏலம் விரைவில் நடத்தப்படும் என்றும் இந்தாண்டு இறுதியில் 5ஜி தொலைத்தொடர்பு சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிரிபார்க்கப்படுவதாகவும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய தொலைத் தொடர்புத்துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான் அறிவித்திருக்கிறார். கேள்வி நேரத்தின்போது பேசிய அமைச்சர், 5ஜி தொலைத்தொடர்பு சேவைக்காக நான்கு நிறுவனங்களுக்கு சோதனை நடத்துவதற்காக அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், சோதனைகள் விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார். […]