நாட்டின் 50 ஆவது உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமிக்கப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 50 ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு நியமித்துள்ளார். இவர் நவம்பர் 9 ஆம் தேதி குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு முன்னிலையில் பதவி ஏற்கிறார் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தெரிவித்தார். தற்போது தலைமை நீதிபதியாக இருக்கும் உதய் உமேஷ் லலித் 65 வயது நிறைவடைவதால் ஓய்வு பெற இருக்கிறார், இதனால் அடுத்த தலைமை […]