சென்னையில் மேலும் 500 சுகாதார பணியாளர்களை சென்னை மாநகராட்சி நியமனம் செய்துள்ளது. தமிழகத்தில் நேற்றுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,448 ஆக உள்ளது. இதில், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7672 ஆகவும் உள்ளது. தமிழகத்தில் பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. சென்னையில், ராயபுரம், திருவிக நகர், கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது. இதனால், ராயபுரம், திருவிக நகர், கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் முதற்கட்டமாக வீடு வீடாக சென்று வெப்ப சோதனை பரிசோதனை […]