தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. தருமபுரி மாவட்டம் அரூர், செல்லம்பட்டி, எட்டிப்பட்டி, காட்டூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே மழை பெய்து வருகிறது.அதே போல சேலம், திருவள்ளூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தகவல் தெரிவித்திருந்த நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.