இன்று சென்னை vs பஞ்சாப்.., சேப்பாக்கத்தில் விசில் பறக்குமா? பயிற்சியாளர் சொன்ன பாசிட்டிவ் தகவல்.!
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சென்னை, 9 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இது மட்டுமல்லாமல், சென்னை அணி சொந்த மண்ணில் ஒரு முறை மட்டுமே வெற்றியை ருசித்துள்ளது. மீதமிருக்கும் 5 போட்டிகளில் வென்று கவுரமாக சீசனை விட்டு வெளியேற முயற்சிக்கும். அதேபோல், 5-வது இடத்தில் உள்ள […]