இன்று கல்விகண் திறந்த கர்மவீரர் காமராஜர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்று ஒவ்வொரு பிள்ளையும் கையில் ஏடு தூக்க காரணமாக இருந்தவர்.தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவிற்கே தலைவர்களை உருவாக்கி தந்தவர். நாட்டிற்காக கண் துயில் கொள்ளமால் பல வருடங்கள் உண்மையாகவும், உன்னத மனிதராகவும், கடைசி காலக்கட்டத்தில் கூட நாட்டிற்காகவே உழைத்தவர் தனக்கென்று துணைக்கொண்டு வாழாமல் பாரதத்தை துணையாக கொண்டு வாழ்ந்த மாமனிதர். அரசியலில் தன் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் கடைமையாற்றிய கருப்பு காந்தி.அவரை இன்னாளில் எல்லோரும் நினைவில் கொள்வோம். […]