கடந்த நவம்பர் 12-ஆம் தேதி உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் நடைபெற்று வந்த சுரங்கப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு 41 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். 17 நாட்களாக இவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. நேற்று இயந்திரம் மூலம் துளையிடும் பணி நிறுத்தப்பட்டு எலிவளைச் சுரங்க முறை மூலம் தொழிலாளர்களைக் கொண்டு துளையிடும் பணி தொடங்கியது. எலிவளைச் சுரங்க முறையில் ஈடுபட்ட பணியாளர்கள் கைக்கருவிகளை கொண்டு சுரங்கப்பாதையை உருவாக்கினார்கள். இந்த எலிவளைச் சுரங்க முறை மூலம் ஒரு நபர் […]