தமிழக முதலமைச்சராக 4 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு மூன்று ஆண்டுகளைக் கடந்து விட்டது.இன்று நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் ஆளுநா் மாளிகையில் தமிழகத்தின் 13ஆவது முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றாா். இந்நிலையில் மூன்றாண்டு முடிவடைந்தது.நான்காவது ஆண்டு தொடங்கியுள்ளதை முன்னிட்டு அதிமுக தொண்டர்கள் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் […]