ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள நான்கு வெவ்வேறு தனியார் பள்ளிகளில் படிக்கும் 9 மற்றும் 10 வகுப்புகளைச் சேர்ந்த 27 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்துள்ளனர். இதனால், பத்து நாட்களுக்கு பள்ளிகளை மூடுவதற்கும், சுற்றுப்புறங்களை சுத்தம் செய்வதற்கும் கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் கொரோனா சோதனைகளுக்கு உட்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.