உத்தரப்பிரதேசத்தில் ரயிலில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் கடும் வெப்பத்தால் மரணம் அடைந்துள்ளனர். கோவையில் இருந்து ஒரு குழு வடமாநிலங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளது. சுற்றுலாவை முடித்துவிட்டு அந்த குழு கேரளா எக்ஸ்பிரஸில் ஆக்ராவில் இருந்து கோவைக்கு புறப்பட்டனர்.ரயில் புறப்பட்ட சிறுது நேரம் கழித்து வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்துள்ளது.இந்த நிலையில் இந்த வெப்பத்தை தாக்குபிடிக்க முடியாமல் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.இவர்களின் உடல் ஜான்சி ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. உயிரிழந்தவர்கள் விவரம்: பழனிசாமி வயது 80 […]