4-ம் கட்ட ஊரடங்கு தளர்வு மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர்,மே மாதம் வரை கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 31-ம் தேதி உடன் 3-ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ளது. இந்நிலையில், 4-ம் கட்ட தளர்வுகள் செப்டம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]