பிரதமர் மோடியின் விவசாய நிதி உதவி திட்ட முறைகேடு தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் முறைகேடு அதிக அளவில் நடைபெற்று இருப்பதால் தற்காலிகமாக இந்த திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அந்தந்த மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு வேளாண்மை துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி தெரிவித்திருந்தார். இதனால் பல மாவட்டங்களில் பிரதமர் கிசான் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டடு, விசாரணை நடைபெற்றது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான […]
மதுரையில் போதை மாத்திரைகளை விற்கும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரையில் உள்ள மெஜூரா கோட்ஸ் பாலத்தின் கீழ் கரிமேடு காவல் உதவி ஆய்வாளர் சுந்தரபாண்டியன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது 3 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அவர்களின் மீது சந்தேகமடைந்த போலீசார் மூவரையும் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் கையிலிருந்த போதை மாத்திரைகள் போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் வில்லாப்புரம் மீனாட்சி நகரை சேர்ந்த பிரதீப்குமார் (26), […]