சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து வந்த 14 பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது, அவர்களிடம் நடத்திய சோதனையில் 38 மாத்திரை வடிவிலான தங்க பேஸ்ட் அவர்களின் மலக்குடலில் இருந்து மீட்கப்பட்டது. பின்னர், மலக்குடலில் இருந்து பிரித்தெடுக்கும் போது, அது 4.14 கிலோ தங்கம் என்றும் அதன் மதிப்பு ரூ. 2.16 கோடி என தெரியவந்தது. இந்த வழக்கு தொடரபாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.