கொரோனா வைரஸ் மூன்றாவது அலை உருவாவதற்கான சாத்தியங்கள் உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் குறித்த ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த வைரசை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவை பொருத்தவரையில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், மத்திய மாநில அரசுகள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் அடிப்படையில், தற்போது தொற்று […]
கொரோனா 3-வது அலையை தடுப்பதற்கான ஏற்பாடுகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். தமிழகத்தில், கொரோனா நோய் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் திரவ மருத்துவ ஆக்சிஜனை வாங்குவதற்காகவும், மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் முயற்சிகளுக்கு கை கொடுக்கின்ற […]
கொரோனாவின் 3 ஆவது அலை தென்னாப்பிரிக்காவில் தொடங்கியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலையால் பெரிய பாதிப்புகளை சந்தித்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் இறந்துள்ளனர். முதல் அலையை விட இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் 3 ஆம் அலை தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் இதுவரை 40 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1 லட்சத்திற்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இங்கு 3 ஆம் […]
இந்தியாவில் கொரோனா 3-ஆவது அலையை தடுக்க முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. இந்தியாவில் கடந்த வருடம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் ஒரு வருடத்திற்கு மேலாக தற்போதுவரை தனது கோர முகத்தை காட்டி வருகிறது. கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாவது அலையின் காரணமாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தியாவில் கடந்த சில நாள்களாக நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டி வருகிறது. இதனால், […]