காவலர்கள் 3 ஷிப்ட் அடிப்படையில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. கரூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமைக் காவலர் மாசிலாமணி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழக காவல்துறையில் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும். காவலர்களின் ஊதியத்தை உயர்த்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. […]