மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் மசோதா-2020, விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் ஒப்பந்த மசோதா -2020, அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா -2020, என 3 வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியது. இந்த வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்புகள் ஏற்படும் எனக் கூறி,மத்திய அரசு வேளாண் மசோதாக்களை வாபஸ் பெற வேண்டும் என்று தலைநகர் டெல்லியில் சம்யுக்தா கிஷான் மோர்ச்சா தலைமையிலான […]
மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் 3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது. டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், இந்த குளிர்காலக் கூட்டத்தொடரானது டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்படி,நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது மற்றும் 26 மசோதாக்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றத் திட்டமிட்டிருந்தது. இன்று காலை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், பல்வேறு கோரிக்கைகளை […]
பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் வருகின்ற 24 ஆம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி,டெல்லியில் விவசாயிகள் ஓராண்டாக போராடி வரும் நிலையில் ,மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாகவும்,வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக,கடந்த 19 ஆம் தேதியன்று பிரதமர் மோடி அறிவித்தார். நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டங்கள் இயற்றப்படுவதற்கு முன்பு,மக்களவை மற்றும் மாநிலங்களவை […]