ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் சிங்கம் பகுதியில் நேற்று இரவு பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து, தேடுதல் வேட்டையில் மேற்கொண்டனர். அப்போது, பாதுகாப்புப் படையின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த மோதலில் பாதுகாப்பு படையினர் இரண்டு பயங்கரவாதிகளை சுட்டு கொலை செய்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகள் தொடர்ந்து பல்வேறு வகையான தொடர் தாக்குதல் சம்பவங்களை நடத்தி வருகின்றனர். இவர்களின் இந்த கொடூர தாக்குதல் சம்பவத்திற்கு அப்பாவி பொதுமக்கள் , பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழப்பது வாடிக்கையாக இருக்கின்றது. இந்நிலையில் சமீபத்தில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப்படை இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகின்றது. புத்காமின் கோபால்போரா என்ற பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை குறிவைத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய துல்லிய தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டு அவர்களிடம் இருந்த வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் பாதுகாப்புபடையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.