2-வது தலைநகராக மதுரை அமைக்கப்பட்டால் எனக்குமகிழ்ச்சி என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் தலைநகராக இருந்து வருகிறது சென்னை.அங்கு மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சென்னையில் தான் அனைத்து துறை சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இரண்டாவது தலைநகரை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. 2 ஆவது தலைநகரமாக மதுரையை நிச்சயமாக அறிவிக்க வேண்டும். மதுரை தான் முதன்மையான இடம் என்று அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் கூறினார். […]