ஜூலை மாதத்தில் முடிவடையும் கொரோனா இரண்டாவது அலை..!அடுத்த 6 மாதங்களில் தொடங்கும் மூன்றாம் அலை – மத்திய வல்லுநர் குழு தகவல்…!

ஜூலை மாதத்தில் கொரோனா இரண்டாவது அலை முடிவடையும் என்றும்,எனினும்,அடுத்த 6 மாதங்களில் கொரோனா மூன்றாம் அலை தொடங்கும் என்றும் மத்திய வல்லுநர் குழு தகவல் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தற்போது கொரோனா 2 ஆம் அலை பரவலானது முன்பை விட மெல்லக் குறைந்து வருகிறது.மேலும்,மகாராஷ்டிரா,டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில தினங்களாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று குறைந்துள்ளது.ஆனால்,தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா 2 ஆம் அலையின் தாக்கமானது தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,இந்தியாவில் கொரோனா பரவலின் … Read more

ஊடகத்துறையினர் அனைவரும் முன்களப் பணியாளர்களாகவே கருதப்படுவர் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

ஊடகத்துறையினர் அனைவரும் முன்களப் பணியாளர்களாகவே கருதப்படுவார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா பரவலுக்கு எதிரான போரில் செய்தித்தாள்,காட்சி,ஒலி ஆகிய ஊடகங்களில் பணிபுரிவோர் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என்று வருகின்ற மே 7 ஆம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் இருப்பது ஊடகத்துறையே.ஏனெனில்,கடுமையான மழை மற்றும் வெயிலிலும் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் … Read more

#ElectionBreaking: திங்கள்கிழமை பதவியேற்பு விழா..!கேரள முதல்வர் பினராயி உத்தரவு..!

நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன்,திங்கள்கிழமை பதவியேற்பு விழா நடத்த வேண்டும் என்று ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். தமிழகம்,கேரளா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் நாளை வாக்கு எண்ணிக்கையானது நடைபெற உள்ளது.இந்நிலையில்,கேரளா மாநிலத்தின் ஆளும் இடதுசாரி கட்சியானது அதிக வாக்குகள் பெற்று ஆட்சியைப் பிடித்தால்,அதற்கு மறுநாள் திங்கள்கிழமை உடனடியாக பதிவியேற்பு விழாவை நடத்த வேண்டும் என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். ஏனெனில்,கொரோனா … Read more

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி..!தயார் நிலையில் உள்ள அப்பல்லோ,மேக்ஸ் மற்றும் ஃபோர்டிஸ் மருத்துவமனைகள்…!

அப்பல்லோ,மேக்ஸ் மற்றும் ஃபோர்டிஸ் போன்ற தனியார் மருத்துவமனைகள் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் தடுப்பூசி போட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,ஒவ்வொரு நாளும் 4 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும்,3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.எனவே,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.முன்களப்பணியாளர்கள் மற்றும் 45 முதல் 60 வயது வரை … Read more

அடடா..! ATM மெஷினில் இனி தங்கக்காசு வருமா…!

கோவை மாவட்டத்தில் முதல் முறையாக தங்கக்காசுகளைத் தரும் ATM மெஷினானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோவையில் உள்ள ஃபுல்மூன் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம்,’கோல்ட் ஆன் தி கோ’ என்ற பெயரில் தங்க நாணயங்களை வழங்கும் ஏடிஎம் மெஷினை சிங்கப்பூர் பிளாசாவில் உள்ள மென்ஸ் அவென்யூவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஃபுல்மூன் எக்ஸ்போர்ட்ஸின் பங்குதாரர் எல்.எஸ். சீனிவாசன் கூறுகையில்,”கொரோனா தொற்று அதிக அளவில் பரவுவதால்,கடைகளில் நகைகளை நேரடியாக வந்துப் பார்க்க வாடிக்கையாளர்கள் தயங்குகிறார்கள்.எனவேதான்,இந்த தங்க நாணயங்களை வழங்கும் ஒரு புதுமையான ATM மெஷினை … Read more

ஆக்சிஜன் தேவை..!கார் உற்பத்தியை நிறுத்தும் மாருதி நிறுவனம்..!

நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஜிகி நிறுவனம்,மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதைக் கருத்தில் கொண்டு தங்களது கார் தயாரிப்பை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மிகவும் மோசமாக இருந்து வருகிறது.இதனால்,பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து பல தனியார் நிறுவனங்கள்,தங்களால் முடிந்த அளவு ஆக்சிஜன் சிலிண்டர்களை மருத்துவமனைகளுக்குக் கொடுத்து உதவி வருகின்றன.அந்த வரிசையில் மாருதி நிறுவனமும் தற்போது ஆக்சிஜன் கொடுத்து உதவ முன்வந்துள்ளது. இதுகுறித்து … Read more

2வது அலை வீச தொடங்கியதா?? முடங்கியது ஐரோப்பி நாடுகள்

கொரோனா பரவலின் 2வது அலை தற்போது  ஐரோப்பிய நாடுகளை தாக்கி வருகிறது.அதன்படி  பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. கொடூரமாக வீசி வரும் 2வது அலையால் இங்கிலாந்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக  இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இவ்வாறு இருக்க மேலும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் 2வது முறையாக முழு ஊரடங்கை அமல்படுத்தத் தொடங்கிவிட்டது. அதன்படி தென் ஐரோப்பாவில் உள்ள போர்ச்சுகல் நாட்டில் கொரோனா … Read more