குரோம்பேட்டை சேர்ந்த பார்த்திபன் இவரது மகள் ராகவி (6) .இவர் முதல் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ராகவி இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடிப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இதைத்தொடர்ந்து சிட்லபாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சிறுமியின் தாய் சூரியகலா மீது சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். […]