2ஜி வழக்கில் ஆர்.ராசா, கனிமொழி உட்பட அனைவரையும் விடுவித்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட கனிமொழி மற்றும் ஆ.ராசா மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர். இந்நிலையில் 2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க கோரி சிபிஐ டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், 2ஜி அலைக்கற்றை வழக்கில் திமுக எம்பிக்கள் ஆ.ராசா, கனிமொழிக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது.