சி.பி.ஐ. மேல்முறையீடு வழக்கில் 2 ஜி வழக்கு விசாரணை மீண்டும் ஐகோர்ட்டில் இன்று முதல் நடைபெறுகிறது. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. மற்றும் மத்திய அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய தொலை தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உட்பட 14 பேரும் விடுதலை செய்யப்படுவதாக சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 21ந்தேதி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் குற்றச்சாட்டுகளை […]
2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிரான வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் அக்டோபர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேருக்கு எதிரான வழக்கில் அவர்களை விடுவித்து டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.இதற்கு எதிரான அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை அக்டோபர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். DINASUVADU
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற 2ஜி வழக்கிலிருந்து கனிமொழி, ஆ.ராசா உட்பட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம், விடுவிக்கப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும் 2ஜி அலைக்கற்றை தனியார் நிறுவங்களுக்கு அளித்த ஒதுக்கீட்டில் நடைபெற்ற சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையில்,திமுகவின் கலைஞர் தொலைக்காட்சிக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனம் 200 கோடி ரூபாய் தந்ததாக தெரிவித்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த […]