நடிகை மஞ்சிமா மோகன் பிரபலமான மலையாள நடிகையாவார். இவர் தமிழில் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும், இவர் பல மலையாள படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் இன்று தனது 27-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.