கர்நாடகாவில் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் இயங்க மாநில அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடகாவில் 10 பணியாளர்களுக்கு மேல் கொண்ட கடைகள், ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் இயங்க மாநில அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. பெண் ஊழியர்களை இரவு 8 மணிக்கு மேல் பணி செய்ய அனுமதிக்கக்கூடாது. ஒரு ஊழியருக்கு 8 மணி நேரம் மட்டும் பணி, கூடுதலாக 2 மணி நேரம் பணி வழங்கலாம் என்று […]
கடந்த 24 மணி நேரத்தில் 1,334 பேருக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, 27 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,334 பேருக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, 27 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15712 ஆகவும், இறப்புகள் 507 ஆகவும் உள்ளன என்றும் கடந்த 28 நாட்களில் புதுச்சேரியின் மஹேயில் மற்றும் கர்நாடகாவின் கோடகுவில் […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால், நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில், மே 3 ஆம் தேதி வரை நீடிப்பதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதனிடையே இந்தியாவில் இதுவரை 10363 பேர் பாதிக்கப்பட்டு, 339 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1036 பேர் குணமடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனா வைரசால் […]
கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 906 பேர் பாதிக்கப்பட்டு, 34 பேர் உயிரிழப்பு என சுகாதாரத்துறை இணை செயலர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 34 பேர் உயிரிழந்துள்ளார்கள். அதேபோல் 906 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 20 சதவிகிதம் பேருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார். மேலும் 1,671 கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன், தீவிர […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 33 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்றும் 678 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்க தவிர வேற எதற்காகவும் வெளியில் வர கூடாது எனவும் அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு […]