தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ளது.இதனால் பாதுகாப்புகள் மற்றும் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு வரும் வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் அனைத்து வகையான மதுக்கடைகளையும் மூட கலால் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.