தமிழகத்தில் ‘இ-பதிவு’ பெறுவதற்கான காரணங்களில் திருமணம் என்ற பிரிவு மீண்டும் நீக்கம்..!

தமிழகத்தில் ‘இ-பதிவு’ பெறுவதற்கான காரணங்களில் திருமணம் என்ற பிரிவு மீண்டும் நீக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக மே 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இருப்பினும்,திருமணம்,முக்கிய உறவினரின் இறப்பு,வேலைவாய்ப்பு,மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்டத்திற்குள்ளும்,பிற மாவட்டத்திற்கு வெளியே பயணம் செய்ய நேற்று முதல் ‘இ-பதிவு’ முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து,’இ-பதிவு’ முறையில் ஏராளமானோர் திருமணத்திற்காக விண்ணப்பித்ததால்,அவசர காரணங்களுக்கான பட்டியலில் இருந்து திருமணம் என்ற பிரிவு நீக்கப்பட்டது. இதனையடுத்து,பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் தமிழக அரசின் ‘இ-பதிவில்’ … Read more

அடேங்கப்பா!இந்தியாவிற்கு ரூ.8,800 கோடி கொரோனா நிவாரண நிதியளித்த இளம் தொழிலதிபர் விடாலிக் புட்டரின் ..!

எத்திரியம் என்ற கிரிப்டோ கரன்சியை உருவாக்கியவரும்,இளம் தொழிலதிபருமான விடாலிக் புட்டரின் என்பவர் இந்தியாவின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.8,800 கோடியை  நிதியுதவியாக அளித்துள்ளார். இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.இதன்காரணமாக, நாட்டில் உள்ள பல மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமான கொரோனா தடுப்பூசி மருந்துகள்,ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகள் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து,இந்தியாவிற்கு வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி மருந்துகள்,ஆக்சிஜன் உபகரணங்கள் போன்ற உதவிகள் … Read more

கொரோனா அதிகரிப்பு..! “மத்திய அரசு தன் வேலையை சரியாக செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது”-ராகுல்காந்தி..!

நாட்டின் கொரோனா தொற்று நெருக்கடியைச் சமாளிக்க ,மத்திய அரசு தனது வேலையைச் சரியாக செய்திருந்தால்,வெளிநாடுகளில் இருந்து உதவிகள் பெற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில்,கொரோனா முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து மத்திய அரசானது முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில்,காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் … Read more

கொரோனா நோயாளிகளுக்கு உதவும் 9 வயது சுற்றுச்சூழல் ஆர்வலர் லிசிபிரியா..!

புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் லிசிபிரியா கங்குஜாம்,நாட்டில் நிலவும் ஆக்ஸிஜன் நெருக்கடிக்கு உதவுவதற்காக தனது சொந்த சேமிப்பிலிருந்து ஆக்ஸிஜன் தரும் மெஷின்களை வாங்கியுள்ளதாக  வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார். “இந்தியாவின் கிரெட்டா” என்று செல்லமாக அழைக்கப்படும் மணிப்பூரைச் சேர்ந்த 9 வயதான லிசிபிரியா கங்குஜாம்,பெரும்பாலும் காற்று மாசுபாட்டிற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து அடிக்கடி குரல் எழுப்பி வருபவர்.மேலும் இயற்கை வளங்களை சரியான முறையில் பயன்படுத்த வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்துரைப்பவர். இதனைத் தொடர்ந்து லிசிபிரியா கங்குஜாம்,விருதுகள் மூலம் தனக்கு கிடைத்த பரிசுத்தொகையை சேமித்து … Read more

மகாராஷ்டிராவில் உச்சத்தில் இருக்கும் கொரோனா கடந்த 24 மணி நேரத்தில் 985 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 63,309 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இது வரை இல்லாத உச்சமாக 985 இறப்புகள் பதிவாகியுள்ளது.தற்பொழுது வரை சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 6.73 லட்சத்திற்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது. இது வரை மகாராஷ்டிராவில் பாதிக்கபட்டவர்களின் 44,73,394  ஆக உயர்ந்துள்ளது.மும்பையில் மட்டும் 24 மணி நேரத்தில் 4,966 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் 78 பேர் உயிரிழந்துள்ளனர்;மாநிலத்தின் மீட்பு விகிதம் 83.4 சதவீதம்; 61,181 பேர் இன்று குணமடைந்து வீடு … Read more

#Bigbreaking:18 வயதுக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள இன்று மாலை 4 மணி முதல் முன்பதிவு ஆரம்பம்…!

18 வயதுக்கும் மேற்பட்டோர்   தடுப்பூசி போட்டுக்கொள்ள இன்று மாலை 4 மணி முதல் பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்றானது அதிவேகமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் போன்ற 45 வயதுக்கும் மேற்பட்டோருக்கு கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,கொரோனா பரவல் மேலும் அதிகரிப்பதைத் தொடர்ந்து மே 1-ந் … Read more

குஜராத்:72 மணி நேரத்தில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைத்து பனாஸ் பால் கூட்டுறவு சங்கம் சாதனை…!

குஜராத் மாநிலத்தில் உள்ள பனாஸ் பால் உற்பத்தி நிலைய பொறியாளர்கள்,72 மணி நேரத்தில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைத்து சாதனை படைத்துள்ளனர். குஜாரத்தில் பால் கூட்டுறவு சங்கத்தின் உதவியுடன் இயங்கி வரும் பனாஸ் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் கடந்த வாரம் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது.இதனால்,வெளியிலிருந்து ஆக்சிஜன் பெறப்பட்டு நிலைமை சரிசெய்யப்பட்டது. இதனையடுத்து பனாஸ் பால் கூட்டுறவு சங்கத் தலைவர் சங்கர் சவுத்ரி, சொந்தமாக ஆக்சிஜன் தயாரிக்க முடிவு செய்தார்.அதன்படி,பனாஸ் பால் உற்பத்தி நிலையத்தின் அனைத்து பொறியாளர்களும் … Read more

பொது சுகாதார ஊழியர்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு நன்றி தெரிவித்த கூகுள் டூடுல்…!

கொரோனா பரவல் நெருக்கடிக்கு மத்தியில் பணிபுரிவதால்,பொது சுகாதார ஊழியர்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூகுள் டூடுல் கூறுகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவும் தற்போதைய சூழலில் கிட்டத்தட்ட எல்லோரும் வீட்டிலிருந்து வேலை செய்யும் போது,பொது சுகாதார ஊழியர்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மட்டும் களத்தில் இருந்து தொற்றுநோய்களுக்கு மத்தியில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்கள் உயிரைக் காப்பாற்றி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து,கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்திலும் தங்கள் உயிரைப் பற்றி … Read more

இந்தியாவுக்கே ஆக்சிஜன் சிலிண்டர்களை உற்பத்தி செய்யும் கேரளா…!

பிற மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வரும் தற்போதைய சூழலில்,இந்தியாவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை உற்பத்தி செய்து வருகிறது கேரள அரசு. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது.இதனால் பல மாநிலங்களில்,படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது.இந்த சமயத்தில்,கேரளாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லவே இல்லை என்று கொச்சி பெஸோ நிறுவனத்தின் துணை சீஃப் கண்ட்ரோலர் வேணுகோபால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வேணுகோபால் கூறுகையில்,”எங்கள் கேரளத்துக்கு தினமும் ஆக்சிஜன் அளவு 85 மெட்ரிக் டன் தேவைப்படுகிறது.கொரோனா தொற்றில் … Read more

#BREAKING: 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு 28ம் தேதி முன்பதிவு!! – மத்திய சுகாதாரத்துறை

18 வயதுக்கு மேற்பட்டோர் வரும் 28ம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். கடந்த ஜனவரி 16ம் தேதி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கிய நிலையில், சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் என தகுதி வாய்ந்த மக்களுக்கு முன்னரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, மே 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு … Read more