2021-22 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடநூல்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். கொரோனா இரண்டாவது அலை பரவலானது தொடர்ந்து நீடிப்பதால் தமிழகத்தில் பள்ளிகள் தற்போது திறக்கப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.மேலும்,கல்வி தொலைக்காட்சி மற்றும் இதர மாற்று வசதிகள் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும் என்றும் கூறினார். அந்த வகையில்,2021-2022-ம் கல்வி ஆண்டுக்கான புதிய காணொலிகள் கல்வித் தொலைக்காட்சியில் விரைவில் […]