இயற்கையின் சீற்றத்தால் ஆறாத வடுவாகிவிட்ட ஆழிப் பேரலைப் பேரழிவின் 16-ஆம் ஆண்டு இன்று என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுனாமி தாக்கியதின் 16- வது நினைவு தினத்தையொட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர்தூவியும், கடலில் பாலை ஊற்றியும் பொதுமக்கள், மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர். 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி இந்தோனேஷியா அருகே பசிபிக் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி உருவெடுத்தது. கரையை நோக்கி நகர்ந்த சுனாமி […]