இந்தியாவில் கொரோனா தாக்கம் ஏறுமுகமாக இருந்து வரும் இந்த சமயத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் 2000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 22 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும், 3 லட்சத்து 2 ஆயிரத்து 544 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 4,454 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் இந்நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் […]