22 பேர் உயிரிழப்பு…ஓட்டுநருக்கு 190 ஆண்டுகள் சிறை தண்டனை – நீதிமன்றம் உத்தரவு!
மத்தியப்பிரதேசம்:22 பேர் உயிரிழக்க காரணமான,அஜாக்கிரதையாக பேருந்தை ஓட்டிய ஓட்டுநருக்கு 190 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தின் சட்டாபூரில் இருந்து பன்னாவுக்கு புறப்பட்ட தனியார் பயணிகள் பேருந்தில் 40 பேர் பயணம் செய்த நிலையில்,ஓட்டுநர் சம்சுதீன் என்பவர் பேருந்தை அதிவேகமாக இயக்கி உள்ளார்.இதனால்,அச்சமடைந்த பயணிகள் மெதுவாக பேருந்தை இயக்குமாறு கூறியும் அவர் கேட்கவில்லை. இதன்காரணமாக,மால்டா மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பேருந்து,ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்து விபதுக்குள்ளனது. இதனால், பேருந்து […]