சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று அவர்களுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு மேற்கொண்டார். அதன் பின், இன்று காலை சென்னையில் நிதிக்குழு தலைவர் அர்விந்த் பனகாரியா தலைமையிலான குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடங்கியது. இதில், பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசுகையில், “பல முக்கியமான திட்டங்களைத் தீட்டி அதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாநிலங்களிடம் தான் இருக்கிறது. […]