சென்னை தாம்பரம் ப்ளூஸ்டோன் நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 16 வயது சிறுவன் கைது. சென்னை தாம்பரம் ப்ளூஸ்டோன் நகைக்கடையில், அசாமை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சிறுவன் கெளரிவாக்கத்தில் இருக்கும் ஜூஸ் கடையில் வேலை பார்த்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அச்சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் அவை அனைத்தும் மீட்கப்பட்டுள்ளது.