விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கக்கோரி டெல்லியில் நாளை போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கங்களில் அறிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பரில் விவசாயிகளின் தொடர் போராட்டம் நடைபெற்றது. இதில், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் முடிவு வந்தது. இந்த நிலையில், அதுபோன்று மற்றொரு தொடர் போராட்டத்தை பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் […]
கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவியின் உயிரிழப்பை கண்டித்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது . இந்நிலையில் கள்ளக்குறிச்சி தாலுகா, சின்னசேலம், நயினார்பாளையத்தில் ஜூலை 31 வரை 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவிப்பு .
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் காலரா பாதிப்பின் காரணமாக மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் கடந்த சில வாரங்களாக வயிற்றுப்போக்கு ,வாந்தி மற்றும் காலராவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.காலரா பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பகுதிகளில் சிறப்பு குழு அமைத்து கண்காணிக்க துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் எச்சிரிக்கையாக இருக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். அதிகரித்து வரும் காலரா தொற்றை கட்டுப்படுத்த அம்மாநில […]
சிதம்பரத்தில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஏற்கனவே கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய விஐபிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அதன்பிறகு ஏற்பட்ட சில காரணங்களால் யாருக்கும் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி கோரி போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் சிதம்பரம் நகரில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் […]
சிதம்பரத்தில் இன்று முதல் ஒரு மாதம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஏற்கனவே கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய விஐபிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அதன்பிறகு ஏற்பட்ட சில காரணங்களால் யாருக்கும் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி கோரி போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் சிதம்பரம் நகரில் […]
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் அலெக்சாண்டர் பிறப்பித்தார். ஆலப்புழா மாவட்டத்தில் 12 மணி நேரத்தில் இரு தலைவர்கள் கொல்லப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஆலப்புழா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஆலப்புழாவில் பாஜக தலைவர் படுகொலை செய்யப்பட்டார். இறந்தவர் பாஜக ஓபிசி மோர்ச்சாவின் செயலாளராக இருந்த ரஞ்சித் சீனிவாசன். அதிகாலையில் அவரது வீட்டிற்குள் சிலர் புகுந்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக சனிக்கிழமை நள்ளிரவு, சோஷியல் […]