மும்பையில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில்,தென்மேற்கு பருவ மழையானது கடந்த சனிக்கிழமையன்று தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,கடந்த நான்கு நாட்களாக மும்பை மற்றும் தானே உள்ளிட்ட பகுதிகளில் கனமழையானது பெய்து வருகிறது. இந்த பலத்த மழையால் சாலைகள் மற்றும் இரயில் தடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு,புறநகர் ரயில் […]