“தலைமை ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்” – ஆதிதிராவிடர் நலத்துறை உத்தரவு!

தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.இதில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.76% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அதாவது, 7,55,998 மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில்,பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% தேர்ச்சி பெற்றனர். இதுபோன்று,10-ஆம் வகுப்பில் மொத்தம் 90.7% மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 மாணவர்கள் எழுதிய நிலையில்,8,21,994 பேர் தேர்ச்சி பெற்றனர் என அமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளி,மேல்நிலைப்பள்ளி … Read more

மாணவர்களுக்கு குட்நியூஸ்…முழு மதிப்பெண் போடுங்கள்- ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மே 23 ஆம் தேதியும்,10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரு தினங்களுக்கு முன்பும் முடிவடைந்த நிலையில்,10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது. அதன்படி,மொத்தம் 17 லட்சம் மாணவர்கள் எழுதிய 1.87 கோடி விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 8-ஆம் தேதி வரை  நடைபெறுகிறது. விடைத்தாள் திருத்தும் பணிக்காக ஒரு அறையில் 1 முதன்மைத் தேர்வாளர்,1 கூர்ந்தாய்வு அலுவலர், 6 முதுகலை … Read more

58 வயதில் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய பிஜேடி எம்எல்ஏ…!

ஒடிசாவில் உள்ள புல்பாணியை சேர்ந்த பிஜூ ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர் அங்கதா ஹான்கார் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.  ஒடிசாவில் உள்ள புல்பாணியை சேர்ந்த பிஜூ ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர் அங்கதா ஹன்கார்  நீண்ட காலமாக  பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வேண்டுமென்று என்ற கனவில் இருந்த நிலையில் தற்போது அவரது கனவு நிறைவேறி உள்ளது.  வெள்ளிக்கிழமை நேற்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பத்தாம் வகுப்பு தேர்வில் கலந்துகொண்டு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட … Read more

தொழிற்கல்வி பாடத்தில் பெறும் மதிப்பெண்கள், பொதுத்தேர்வில் சேர்க்கப்படாது – பள்ளிக்கல்வித்துறை

மாணவர்களின் திறனை மேம்படுத்தும்10-ஆம் வகுப்பில் தொழிற்கல்வி பாடத்துக்கு தேர்வு அறிவிப்பு. இந்தாண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொழிற்கல்வி பாடம் சேர்க்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை கூறுகையில், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வழக்கம் போல் 500 மதிப்பெண்களுக்கே கணக்கீடு செய்யப்படும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தொழிற்கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது அவசியமல்ல. தொழிற்கல்வி பாடத்தில் பெறும் மதிப்பெண்கள், பொதுத்தேர்வில் மதிப்பெண்ணில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்று தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்களின் திறனை மேம்படுத்தும் … Read more

‘இலவச பிரியாணி மற்றும் தங்கும் விடுதி’ – கேரளாவில் 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு அதிரடி சலுகை…!

கேரளாவில் 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு இலவச பிரியாணி மற்றும் தங்கும் விடுதி போன்ற அதிரடி சலுகை வழங்கப்படுகிறது.  இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் பல மாநிலங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதன்படி தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பொது தேர்வுகளை ரத்து செய்த நிலையில், கேரளாவில் கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் பத்தாம் வகுப்பு தேர்வை கேரள அரசு … Read more

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாட வாரியாக மதிப்பெண் குறிப்பிடாமல் தேர்ச்சி என்று மட்டுமே அறிவிக்க முடிவு…! – பள்ளிக்கல்வித்துறை

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாட வாரியாக மதிப்பெண் வழங்கப்படாது. தேர்ச்சி என்று மட்டுமே மதிப்பெண் பட்டியலில் குறிப்பிடப்படும். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் பரவல் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது … Read more