பிறந்தநாள் முன்னரே சர்ப்ரைஸ் கொடுக்கும் விஜய்.. தொடங்கியது உதவித்தொகை பணி!

Vijay meets students

சென்னை: 10, 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் விரைவில் உதவித்தொகை வழங்கவுள்ளார். கல்வி விருது விழா என்ற பெயரில் கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு ரொக்க பரிசு வழங்கினார். அந்த வகையில், இந்த ஆண்டும் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகிய நிலையில், மாணவ மாணவிகளை விரைவில் சந்திக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், … Read more

10, 12ஆம் வகுப்பு மாணவர்களை விரைவில் சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்.!

Actor Vijay

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை விரைவில் சந்திக்க உள்ளதாக நடிகர் நடிகரும் தவெக தலைவருமான விஜய் அறிவித்துள்ளார். ஆனால், அதற்கான தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இது தொடர்பாக அவரது கட்சியின் எக்ஸ் பதிவில், 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி … Read more

வெளியானது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்… முதலிடத்தில் அரியலூர்.!

Tamilnadu and Puducherry 10th Board Exam Result Released

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியாகியுள்ளது. தமிழக மாணவர்களின் தேர்வு முடிவுகளை tnresults.nic.in , dge.tn.gov.in ஆகிய அரசு இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை : தமிழகத்தில் மொத்தம் 12,616 பள்ளிகளில் இருந்து 4,57,525 மாணவர்களும் , 4,52,498 மாணவிகளும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தமாக … Read more

#BREAKING : CBSE 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு..!

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியீடு.  இன்று காலை சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.  இதனை தொடர்ந்து தற்போது, சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள், http://cbseresults.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.