திரிபுராவில் 105 வயது மூதாட்டி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கு அம்மாநில முதல்வர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். திரிபுரா மாநிலம் பிரம்மஹிரா என்ற பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் தாரா கன்யா தெப்பமா. இவருக்கு 105 வயது ஆகிறது. இந்நிலையில் இவர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளார். பலரும் கொரோனா தடுப்பூசி குறித்த வதந்தியால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அஞ்சி வரும் நிலையில், எவ்வித அச்சமும் இல்லாமல் நேரடியாக கொரோனா தடுப்பூசி மையத்திற்கே சென்று தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார் தெப்பமா. இதனை அறிந்த […]