இந்த சிறப்பான நாளில் உங்கள் இருவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் இன்று தனது 100-வது பிறந்த நாளில் அடியெடுத்து வைத்துள்ளார். இதனால் ஒரு நாள் பயணமாக இன்று குஜராத் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது தாயாரின் 100-வது பிறந்த நாளையொட்டி அவரை சந்தித்து ஆசி பெற்றார். காந்தி நகரில் உள்ள தயார் ஹீராபென் இல்லத்தில், அவரை சந்தித்து பிரதமர் மோடி ஆசி பெற்றார். […]