NREGS : நாடு முழுதுவம் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் உள்ள வேலைவாய்ப்பற்ற மக்களுக்கு பயன்படும் வகையில் அவர்களுக்கு உடல்உழைப்பு வேலை 100 நாட்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் தூர்வாருவது, மற்ற ஊரக மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வது ஆகியவை மேற்கொள்ளப்படும். இதற்கான ஊதியம் தினசரி வகையில் […]
100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்கள் தனியார் நிலத்திலும் வேலை செய்து வருகிறார்கள். – உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம். கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட திட்டம் தான் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம். ஆனால் இந்த திட்டம் சரிவர நடைபெறுவது இல்லை என பல்வேறு குற்றசாட்டுகள் அவ்வப்போது எழும். தற்போது இந்த திட்டம் குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்துக்களை கண்டனங்களாக பதிவு செய்துள்ளது. […]
முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு வழங்கினார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூ.1178 கோடியை விடுவிக்கக் கோரி தொகையினை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு வழங்கினார். இந்த சந்திப்பிற்கு பின் […]